உடுமலை அருகே சர்க்கரை உற்பத்தி துவக்கம்

அத்தியாவசிய பொருளான சர்க்கரை உற்பத்தி மற்றும் குறித்த காலத்தில் கரும்பு அறுவடை செய்யப்படாவிட்டால் காய்ந்து கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால், சர்க்கரை ஆலை இயங்க மாநில அரசு அனுமதியளித்தது.


திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள, கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அறுவடை செய்யப்பட்ட கரும்பு கொண்டு வரப்பட்டு, அரவைப்பணிகள் துவங்கின. அதிகாரிகள் கூறுகையில், 'அத்தியாவசிய பொருளான சர்க்கரை உற்பத்தி மற்றும் கரும்பு விவசாயிகள் நலன் கருதி, சர்க்கரை ஆலை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், ஆலையில் உற்பத்தி துவங்கியுள்ளது' என்றனர்.